பில்லூர் அணையில் இருந்து வினாடிக்கு 8,000 கனஅடி தண்ணீர் திறப்பு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
கோவை, 02 ஆகஸ்ட் (ஹி.ச.) கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மற்றும் கேரள மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பில்லூர் அணையின்
Mangalam dam


கோவை, 02 ஆகஸ்ட் (ஹி.ச.)

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மற்றும் கேரள மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

பில்லூர் அணையின் மொத்த கொள்ளளவு உயரம் 100 அடி நிலையில், தற்போது நீர்மட்டம் 97 அடியை எட்டியுள்ளது.

அணைக்கு தற்போது வினாடிக்கு 8,000 கனஅடி நீர் வந்துகொண்டிருப்பதால், அணையின் பாதுகாப்பு கருதி அதே அளவான 8,000 கனஅடி தண்ணீர் பவானியாற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக பவானியாற்றில் நீரின் வேகம் அதிகரித்துள்ளதால், கரையோர பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும், ஆற்றங்கரைக்கு செல்ல வேண்டாம் என்றும் மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், நீர்வரத்து நிலையை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், பொதுமக்கள் மாவட்ட நிர்வாகம் மற்றும் வருவாய்த்துறையினர் வழங்கும் பாதுகாப்பு அறிவுறுத்தல்களை தவறாமல் பின்பற்றுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P