Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 02 ஆகஸ்ட் (ஹி.ச.)
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உடுமலை–பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் தண்ணீர் லாரி மீது கார் மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் 3 பெண்கள் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
உடுமலையிலிருந்து பொள்ளாச்சி நோக்கி வந்த கார், நல்லாம்பள்ளி பிரிவு பகுதியில் சென்றபோது, தேசிய நெடுஞ்சாலையின் சென்டர் மீடியனில் நடப்பட்ட மரங்களுக்கு லாரி மூலம் தண்ணீர் ஊற்றும் பணி நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது அதிவேகமாக வந்த கார், சாலையோரத்தில் நின்றிருந்த தண்ணீர் லாரியின் மீது பலத்த வேகத்தில் மோதியது.
இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
ஆனால் காரில் பயணித்த 3 பெண்கள் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கோமங்கலம் காவல் நிலைய போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்தவர்கள் கோவை மாவட்டம் மதுக்கரை அருகே உள்ள குரும்பபாளையத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
விபத்திற்கான காரணம் குறித்து கோமங்கலம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam