Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 02 ஆகஸ்ட் (ஹி.ச.)
இளநிலை மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு தொடங்கவுள்ள நிலையில், மாணவர்களுக்கு உதவும் வகையில் மத்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மருத்துவ கலந்தாய்வுக் குழு புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது.
இளநிலை மருத்துவ மாணவர்கள் கலந்தாய்வு நடைமுறைகளை எளிதாக புரிந்துகொள்ளும் வகையில் ஐந்து வழிகாட்டி காணொளிகளை மருத்துவ கலந்தாய்வு குழு வெளியிட்டுள்ளது.
நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று கலந்தாய்வுக்கு காத்திருக்கும் லட்சக்கணக்கான மாணவர்களுக்கு இந்த வீடியோக்கள் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த காணொளிகளில் கலந்தாய்வுக்கான பதிவு செய்வது எப்படி, கட்டணம் செலுத்தும் முறை, விருப்பக் கல்லூரிகளை தேர்வு செய்தல் மற்றும் பூட்டுதல், இட ஒதுக்கீடு பெறுவது, கல்லூரியில் சேர்வதற்கான நடைமுறைகள் உள்ளிட்ட அனைத்து முக்கிய அம்சங்களும் படிப்படியாக விரிவாக விளக்கப்பட்டுள்ளன.
மாணவர்கள் எந்தவித குழப்பமும் இன்றி கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும் என்பதற்காகவும், இடைத்தரகர்களை நம்பி ஏமாறாமல் இருக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குழு தெரிவித்துள்ளது.
அனைத்து மாணவர்களும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் இந்த வழிகாட்டி வீடியோக்கள் ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய இரு மொழிகளில் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.
Hindusthan Samachar / vidya.b