சென்னையில் இன்று அனைத்து ரேஷன் கடைகளிலும் e-KYC கைரேகை பதிவு சிறப்பு முகாம்
சென்னை, 02 ஆகஸ்ட் (ஹி.ச.) சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் இன்று e-KYC-க்கான கைவிரல் ரேகை பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதுவரை கைரேகை பதிவு செய்யாத குடும்ப அட்டைதாரர்கள் அனைவரும் இந்த முகாமில் தவறாமல
சென்னையில் இன்று அனைத்து ரேஷன் கடைகளிலும் e-KYC கைரேகை பதிவு சிறப்பு முகாம்


சென்னை, 02 ஆகஸ்ட் (ஹி.ச.)

சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் இன்று

e-KYC-க்கான கைவிரல் ரேகை பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

இதுவரை கைரேகை பதிவு செய்யாத குடும்ப அட்டைதாரர்கள் அனைவரும் இந்த முகாமில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என கூட்டுறவு சங்கம் வலியுறுத்தியுள்ளது.

ஒரு குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள அனைத்து உறுப்பினர்களும் கட்டாயமாக தங்களது கைரேகையை பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரேஷன் பொருட்கள் விநியோகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காகவும், போலி குடும்ப அட்டைகளை ஒழிப்பதற்காகவும் இந்த e-KYC சரிபார்ப்பு முறை அமல்படுத்தப்பட்டு வருகிறது.

இதனிடையே, சொந்த ஊரை விட்டு வேறு பகுதிகளில் தற்காலிகமாக வசித்து வருபவர்கள், தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள நியாய விலைக் கடைகளிலேயே கைரேகை பதிவை மேற்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே பொதுமக்கள் இந்த சிறப்பு முகாமை பயன்படுத்திக் கொண்டு தங்களது e-KYC பதிவை உறுதி செய்து கொள்ளலாம்.

Hindusthan Samachar / vidya.b