இந்திய யூனியன் முஸ்லீம் கட்சியின் தேசியத் தலைவர் காதர் மொகிதீன் மகன் மறைவு - டிடிவி தினகரன் இரங்கல்
சென்னை, 02 ஆகஸ்ட் (ஹி.ச) இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) கட்சியின் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீனின் மூத்த மகன் மருத்துவர் கே.எம்.கே. கலீலூர் ரஹ்மான் உடல்நலக்குறைவு காரணமாக இன்று (ஆகஸ்ட் 2, 2026 ) காலமானார். மருத்துவர்
TTV Dhinakaran offers condolences.


சென்னை, 02 ஆகஸ்ட் (ஹி.ச)

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) கட்சியின் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீனின் மூத்த மகன் மருத்துவர் கே.எம்.கே. கலீலூர் ரஹ்மான் உடல்நலக்குறைவு காரணமாக இன்று (ஆகஸ்ட் 2, 2026 ) காலமானார்.

மருத்துவர் கலீலூர் ரஹ்மானின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், முக்கியப் பிரமுகர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் எக்ஸ் தளத்தில் இன்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது,

இந்திய யூனியன் முஸ்லீம் கட்சியின் தேசியத் தலைவர் திரு கே.எம். காதர் மொகிதீன் அவர்களின் மூத்த புதல்வர் மருத்துவர் கே.எம்.கே.கலீலூர் ரஹ்மான் அவர்கள் உடல்நலக் குறைவால் மறைந்த செய்தி மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது.

தனது புதல்வரை இழந்து வாடும் திரு கே.எம்.காதர் மொகிதீன் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் கட்சியின் நிர்வாகிகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b