Enter your Email Address to subscribe to our newsletters

தென்காசி, 02 ஆகஸ்ட் (ஹி.ச.)
தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகள் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் பெய்துவரும் தொடர் கன மழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் உள்ள பல்வேறு நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டு வருகிறது.
அந்த வகையில், தென்காசி மாவட்டத்தில் உள்ள 5 அணைகளின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வரும் நிலையில், மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய அணையான 132 அடி உயரம் கொண்ட அடவிநயினார் கோவில் நீர்த்தேக்கமானது தற்போது 102 அடியை எட்டியுள்ளது.
குறிப்பாக, அணைக்கு சுமார் 258 கன அடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், அணையானது வேகமாக நிரம்ப வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
அதேபோல், மாவட்டத்தில் உள்ள மற்ற அணைகளான 85 அடி உயரம் கொண்ட கடனாநதி அணையானது 66 அடி உயரத்தையும், 84 அடி உயரம் கொண்ட ராமநதி அணை 64 அடி உயரத்தையும், 72.10 கன அடி உயரம் கொண்ட கருப்பாநதி அணை 47 அடி உயரத்தையும் எட்டி உள்ள நிலையில் மாவட்டத்தில் உள்ள மிகச் சிறிய அணையான 36 அடி உயரம் கொண்ட குண்டாறு அணையானது தனது முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிந்து வருகிறது.
குறிப்பாக குண்டாறு அணைக்கு 69 கன அடி நீரானது வந்து கொண்டிருக்கும் நிலையில், அணைக்கு வரும் தண்ணீரானது அப்படியே வெளியேறி வருவது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / ANANDHAN