தீரன் சின்னமலை நினைவு நாளை முன்னிட்டு நாளை திருப்பூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை -மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
திருப்பூர், 02 ஆகஸ்ட் (ஹி.ச.) கொங்கு மண்டலத்தின் பெருமைமிகு சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு தினம் நாளை அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் சமூக ஆர்வலர்களும் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
local holiday for Tiruppur district tomorrow


திருப்பூர், 02 ஆகஸ்ட் (ஹி.ச.)

கொங்கு மண்டலத்தின் பெருமைமிகு சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு தினம் நாளை அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் சமூக ஆர்வலர்களும் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யவுள்ளனர்.

இது தொடர்பாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மனிஷ் எஸ். நர்னாவரே வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஆகஸ்ட் 3 ஆம் தேதி திங்கட்கிழமை தீரன் சின்னமலை நினைவு தினத்தை முன்னிட்டு திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவீரன் தீரன் சின்னமலையின் தியாகத்தை போற்றும் வகையிலும், அவரது நினைவு நாள் நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் திரளாக பங்கேற்க ஏதுவாகவும் இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி சனிக்கிழமை அன்று திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும், பள்ளி கல்லூரிகளும் வழக்கம் போல் முழு வேலை நாளாக செயல்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் தனது உத்தரவில் உறுதிப்படுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b