வேளாண் வணிகத்துறை திட்டங்களில் மானியம் பெற ஆதார் கட்டாயம்
சென்னை, 20 ஆகஸ்ட் (ஹி.ச.) வேளாண் வணிகத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களின் கீழ் வழங்கப்படும் மானியம் மற்றும் சலுகைகளைப் பெறும் பயனாளிகள் தங்களது ஆதார் எண்ணை சமர்ப்பிப்பது கட்டாயம் என தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அறி
Aadhar


சென்னை, 20 ஆகஸ்ட் (ஹி.ச.)

வேளாண் வணிகத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களின் கீழ் வழங்கப்படும் மானியம் மற்றும் சலுகைகளைப் பெறும் பயனாளிகள் தங்களது ஆதார் எண்ணை சமர்ப்பிப்பது கட்டாயம் என தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அறிவித்துள்ளது.

அதன்படி, வேளாண் வணிகத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்களில் மானியம் மற்றும் பிற சலுகைகளை பெற விரும்பும் பயனாளிகள், விண்ணப்பிக்கும் போது தங்களது ஆதார் எண்ணை சமர்ப்பிக்க வேண்டும்.

இதனிடையே, புதிதாக ஆதார் எண்ணுக்கு பதிவு செய்துள்ளவர்கள், தங்களது ஆதார் அட்டை கிடைக்கும் வரை காத்திருக்க தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட மாற்று ஆவணங்களை சமர்ப்பித்து, தகுதியின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட திட்டங்களின் மானியம் மற்றும் சலுகைகளைப் பெறலாம் என வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை தெரிவித்துள்ளது.

இதன் மூலம், புதிதாக ஆதார் பதிவு செய்துள்ள பயனாளிகளும் அரசின் வேளாண் வணிகத்துறை திட்டங்களின் கீழ் வழங்கப்படும் மானியம் மற்றும் சலுகைகளைப் பெறுவதற்கு உரிய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ