Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 20 ஆகஸ்ட் (ஹி.ச.)
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் நகராட்சியில் பணியாற்றும் 70-க்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்களுக்கு கடந்த 45 நாட்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனால் அதிருப்தியடைந்த பணியாளர்கள் இன்று பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நிலுவையில் உள்ள சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
மேலும், சம்பளம் வழங்கும் வரை பணிக்கு திரும்ப மாட்டோம் என தெரிவித்த பணியாளர்கள், பணியை புறக்கணித்துவிட்டு வீடுகளுக்கு திரும்பினர்.
ஒப்பந்த பணியாளர்கள் பணிக்கு வராததால் அம்பாசமுத்திரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குப்பை சேகரிப்பு உள்ளிட்ட துப்புரவு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் பல்வேறு பகுதிகளில் குப்பைகள் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
நிலுவையில் உள்ள சம்பளத்தை உடனடியாக வழங்கி, துப்புரவு பணிகளை சீராக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Hindusthan Samachar / P YUVARAJ