அம்பேத்கர் அயலக கல்வி திட்டத்தில் நிதி தாமதமாக வழங்கப்படவில்லை – அமைச்சர் வன்னி அரசு
சென்னை, 20 ஆகஸ்ட் (ஹி.ச.) அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் பயிலும் மாணவர்களுக்கு நிதி தாமதமாக வழங்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டை அமைச்சர் வன்னி அரசு மறுத்துள்ளார். மலேசியாவில் முனைவர் பட்டம் பயிலும் தமிழ
வன்னியரசு


சென்னை, 20 ஆகஸ்ட் (ஹி.ச.)

அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் பயிலும் மாணவர்களுக்கு நிதி தாமதமாக வழங்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டை அமைச்சர் வன்னி அரசு மறுத்துள்ளார்.

மலேசியாவில் முனைவர் பட்டம் பயிலும் தமிழக மாணவர் ஒருவர், இரண்டாம் ஆண்டுக்கான கல்வி மற்றும் வாழ்வாதார உதவித்தொகை கடந்த 5 மாதங்களாக வழங்கப்படவில்லை என குற்றம்சாட்டியிருந்தார். இதனால் அன்றாட செலவுகளுக்காக நண்பர்களிடம் கடன் வாங்கி வருவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் வன்னி அரசு, அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை திட்டத்தில் இதுவரை நிதி தாமதமாக வழங்கப்பட்டதில்லை என தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட மாணவர் தேவையான சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களை முறையாக சமர்ப்பிக்காமல் கூடுதல் நிதி கோருவதாகவும், இதன் காரணமாகவே நிதி வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், இத்திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை எவ்வித தடங்கலும் இன்றி தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

உண்மைத் தகவல்களை முழுமையாக சரிபார்க்காமல், அரசியல் உள்நோக்கத்துடன் தவறான தகவல்கள் பரப்பப்படுவதாகவும் அமைச்சர் வன்னி அரசு குற்றம்சாட்டியுள்ளார்.

Hindusthan Samachar / GOKILA arumugam