Enter your Email Address to subscribe to our newsletters

திருமலை , 20 ஆகஸ்ட் (ஹி.ச.)
திருமலை ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள அனைத்து அறைகளும் நிரம்பிய நிலையில், இலவச தரிசனத்துக்காக காத்திருக்கும் பக்தர்களின் வரிசை கோவிலுக்கு வெளியேயும் நீண்டுள்ளது. தற்போது பக்தர்களின் வரிசை சிலாதோரணம் வரை சென்றுள்ளது.
டோக்கன் இல்லாமல் இலவச தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க சுமார் 18 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், சிற்றுண்டி உள்ளிட்ட வசதிகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தொடர்ந்து செய்து வருகின்றனர்.
76,464 பக்தர்கள் தரிசனம்
நேற்று ஒரே நாளில் 76,464 பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். அவர்களில் 36,913 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். மேலும், பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை மூலம் ஒரே நாளில் ரூ.4.94 கோடி வருமானம் கிடைத்ததாக திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
வார இறுதி நெருங்கி வருவதால், திருமலையில் பக்தர்களின் கூட்டம் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை தடையின்றி வழங்குவதற்கான ஏற்பாடுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA