Enter your Email Address to subscribe to our newsletters

அமராவதி , 20 ஆகஸ்ட் (ஹி.ச.)
ஆந்திரப் பிரதேச சட்ட மேலவையில் அமைச்சர் நாரா லோகேஷ் தாக்கல் செய்த 5 முக்கிய மசோதாக்களுக்கு ஒருமனதாக ஒப்புதல் அளிக்கப்பட்டது. கல்வி, உயர்கல்வி, நூலகம் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைகளில் சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் வகையில் இந்த மசோதாக்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
சட்ட மேலவை கூட்டத்தில் அமைச்சர் நாரா லோகேஷ் 5 மசோதாக்களையும் தாக்கல் செய்தார். இதில் ஆந்திரப் பிரதேச பொது நூலகங்கள் திருத்த மசோதா–2026, ஆந்திரப் பிரதேச உயர்கல்வி ஒழுங்குமுறை மற்றும் கண்காணிப்பு ஆணைய திருத்த மசோதா ஆகியவை அடங்கும்.
இதுதவிர, ஆந்திரப் பிரதேச தனியார் பல்கலைக்கழகங்களின் நிறுவல் மற்றும் ஒழுங்குமுறை திருத்த மசோதா, மாநில கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் பணியிடங்களில் இடஒதுக்கீடு தொடர்பான திருத்த மசோதா ஆகியவற்றுக்கும் சட்ட மேலவை ஒப்புதல் வழங்கியது.
தனியார் திறன் பல்கலைக்கழகங்கள்
மாநிலத்தில் புதிதாக தனியார் திறன் பல்கலைக்கழகங்களை நிறுவுவதற்கும், அவற்றை முறைப்படுத்துவதற்கும் வழிவகுக்கும் ஆந்திரப் பிரதேச தனியார் திறன் பல்கலைக்கழகங்களின் நிறுவல் மற்றும் ஒழுங்குமுறை மசோதாவுக்கும் ஒப்புதல் கிடைத்தது.
5 மசோதாக்களுக்கும் சட்ட மேலவை உறுப்பினர்கள் அனைவரும் ஆதரவு தெரிவித்தனர்.
இதையடுத்து அவை அனைத்தும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA