Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 20 ஆகஸ்ட் (ஹி.ச)
மங்களூரு மற்றும் நீலகிரி விரைவு ரயில்கள் இயக்கப்படும் நேரத்தில் இன்று முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதன்படி மங்களூருவில் இருந்து சென்னை நோக்கி வரும் மங்களூரு விரைவு ரயில், இன்று முதல் புதிய கால அட்டவணையின்படி இயக்கப்படும். இந்த ரயில் அதிகாலை 3.43 மணிக்கு காட்பாடி சந்திப்பை வந்தடையும். அதனைத் தொடர்ந்து அதிகாலை 4.03 மணிக்கு வாலாஜா ரோடு ரயில் நிலையத்திற்கும், 4.38 மணிக்கு அரக்கோணம் சந்திப்பிற்கும், 5.03 மணிக்கு திருவள்ளூர் ரயில் நிலையத்திற்கும் வந்து சேரும் வகையில் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
அதேபோல், நீலகிரி விரைவு ரயிலின் நேரத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்று முதல் இந்த ரயில் அதிகாலை 3.53 மணிக்கு காட்பாடி ரயில் நிலையத்தையும், அதிகாலை 4.43 மணிக்கு அரக்கோணம் ரயில் நிலையத்தையும் வந்தடையும்.
இந்த நேர மாற்றத்தை பயணிகள் கவனத்தில் கொண்டு தங்கள் பயணத்தை திட்டமிடுமாறு ரயில்வே நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b