Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 20 ஆகஸ்ட் (ஹி.ச.)
மத்திய உள்துறை அமைச்சர் அமிக்ஷா தலைமையில், சென்னை அடுத்த கோவளம் நட்சத்திர விடுதியில் நடைபெறும் 31-வது தென் மாநில முதல்வர்கள் மாநாடு இன்று (ஆகஸ்ட் 20-ம் தேதி) காலை 10 மணிக்குத் தொடங்குகிறது.
மாநாட்டில் பங்கேற்க அமைச்சர் அமித் ஷா நேற்று இரவு 9.10 மணிக்குச் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்.
அப்போது அவரை முதலமைச்சர் ஜோசப் விஜய் வரவேற்றார்.
இந்த மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் உட்பட கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட 7 மாநில முதலமைச்சர்கள் மற்றும் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகள் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.
தற்பொழுது கோவளம் தாஜ் நட்சத்திர விடுதியில் இன்று நடைபெறும் மாநாட்டிற்கு தெலுங்கானா துணை முதலமைச்சர் பிபி. மல்லு மற்றும் லட்சத்தீவு ஆளுநர் ஆகியோர்கள் வருகை தந்துள்ளனர்.
மேலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கோவளத்தில் உள்ள நட்சத்திர விடியதற்கு வருகை தந்தனர்.
இதை போல் ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, கர்நாடகா முதலமைச்சர் டி கே சிவகுமார், கேரளா முதலமைச்சர் சதீஷன் ஆகியோரும் மாநாடு நடைபெறும் நட்சத்திர விடுதிக்கு வந்து சேர்ந்தனர்.
அங்கு மூன்று அடுக்கு பாதுகாப்பு செய்யப்பட்டிருந்தன.
மாநாடு நடைபெறும் நட்சத்திர விடுதி முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மாநாடு நடைபெறும் இடம் மற்றும் தங்கும் விடுதியில் தீவிர வாகன சோதனையும் நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து இந்த பகுதி முழுவதுமே போலீஸ் கட்டுப்பாட்டில் உள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN