முதலமைச்சர் ஜோசப் விஜயை வரவேற்று ஈசிஆர் சாலையில் 10 கி.மீ. தொலைவுக்கு பேனர்கள், கொடிகள்
சென்னை, 20 ஆகஸ்ட் (ஹி.ச.) தென்மண்டல முதலமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்க வருகை தரும் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை வரவேற்று, ஈசிஆர் சாலையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சுமார் 10 கிலோமீட்டர் தொலைவுக்கு பேனர்கள் மற்றும் கட்சிக் கொடிகள் வைக்கப்ப
Ec


சென்னை, 20 ஆகஸ்ட் (ஹி.ச.)

தென்மண்டல முதலமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்க வருகை தரும் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை வரவேற்று, ஈசிஆர் சாலையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சுமார் 10 கிலோமீட்டர் தொலைவுக்கு பேனர்கள் மற்றும் கட்சிக் கொடிகள் வைக்கப்பட்டுள்ளன.

சென்னை உத்தண்டி சுங்கச்சாவடி பகுதியில் தொடங்கி கோவளம் வரையிலான ஈசிஆர் சாலையின் இருபுறங்களிலும் முதலமைச்சரை வரவேற்கும் வகையில் பேனர்கள் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடிகள் கட்டப்பட்டுள்ளன.

செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழக செயலாளர் எஸ். குமரவேல் சார்பில் இந்த வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேலின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை வரவேற்றும் ஈசிஆர் சாலையில் பாஜக சார்பில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

இதனால் ஈசிஆர் சாலையில் அரசியல் கட்சிகளின் வரவேற்பு பேனர்கள் மற்றும் கொடிகள் அதிகளவில் காணப்படுகின்றன.

Hindusthan Samachar / P YUVARAJ