சேலம் அருகே நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்
சேலம், 20 ஆகஸ்ட் (ஹி.ச.) சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுவதில்லை என்றும், குறைந்த ஊதியமே வழங்க
Contract sanitation workers stage


சேலம், 20 ஆகஸ்ட் (ஹி.ச.)

சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இவர்களுக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுவதில்லை என்றும், குறைந்த ஊதியமே வழங்கப்பட்டு வருவதாகவும், கூறப்படுகிறது.

மேலும் வருங்கால வைப்பு நிதியான பி.எஃப் தொகையும் முறையாக செலுத்தப்படவில்லை என பணியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த தூய்மைப் பணியாளர்கள் இன்று காலை ஒன்று திரண்டு ஆத்தூர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தங்களுக்கு தரமான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும், ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும், பி.எஃப் உள்ளிட்ட அரசின் அனைத்து சலுகைகளையும் உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி அப்பகுதியில்போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

அதிகாரிகள் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / vidya.b