மின் கட்டண உயர்வு மற்றும் கணக்கீட்டு முறையில் குழப்பம் - சட்டப்பேரவையில் செந்தில் பாலாஜி கவன ஈர்ப்பு தீர்மானம்
சென்னை, 20 ஆகஸ்ட் (ஹி.ச.) அண்மைக்காலமாக மின் கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டிருப்பதால் பொதுமக்கள், குறிப்பாக ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பெரும் சுமைக்கு ஆளாகியுள்ளனர். வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் மின் நுகர்வை அளவிடும் (Reading) முறையில்
மின் கட்டண உயர்வு மற்றும் கணக்கீட்டு முறையில் குழப்பம் - சட்டப்பேரவையில் செந்தில் பாலாஜி கவன ஈர்ப்பு தீர்மானம்


சென்னை, 20 ஆகஸ்ட் (ஹி.ச.)

அண்மைக்காலமாக மின் கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டிருப்பதால் பொதுமக்கள், குறிப்பாக ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பெரும் சுமைக்கு ஆளாகியுள்ளனர்.

வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் மின் நுகர்வை அளவிடும் (Reading) முறையில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளன.

இதனால் பயன்பாட்டை விட பல மடங்கு கூடுதல் தொகைக்கு மின்கட்டண ரசீதுகள் வருவதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் மின் கட்டண உயர்வு மற்றும் மின் கட்டணம் கணக்கிடும் முறையில் நிலவும் குழப்பங்கள் குறித்து சட்டப்பேரவையில் திமுக எம்.எல்.ஏ.வும் முன்னாள் அமைச்சருமான வி.செந்தில் பாலாஜி இன்று கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இன்று இந்தப் பிரச்சினையை எழுப்பிய அவர்,

சமீபத்திய மின் கட்டண உயர்வால் பொதுமக்கள், குறிப்பாக நடுத்தர மற்றும் ஏழை எளிய குடும்பங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மின் நுகர்வுக் கணக்கீட்டில் வெளிப்படைத்தன்மை இல்லாததால் மக்களிடையே பெரும் குழப்பம் நிலவுவதாகவும் குற்றம் சாட்டினார்.

இதுதொடர்பாக அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளித்த சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி எழுப்பிய கேள்வி குறித்து சம்பந்தப்பட்ட துறை அமைச்சரிடம் இருந்து விரிவான பதில் பெறப்பட்ட பிறகு, அதன் மீதான அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.

Hindusthan Samachar / vidya.b