Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 20 ஆகஸ்ட் (ஹி.ச.)
ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வருகிறது. அந்த வகையில் நேற்று (ஆகஸ்ட் 19) காலை நிலவரப்படி தங்கம் விலை அதிரடியாகக் குறைந்துள்ளது.
அதன்படி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.85 குறைந்து ஒரு கிராம் ரூ.14,205க்கும், சவரனுக்கு ரூ.680 குறைந்து ஒரு சவரன் ரூ.1,13,640க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தொடர்ந்து நேற்று மாலை தங்கம் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது.
அதன்படி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.195 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,400க்கும், சவரனுக்கு ரூ.1560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,15,200க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதற்கிடையே இன்றும் (ஆகஸ்ட் 20) தங்கம் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்திருக்கிறது.
அதன்படி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,600க்கும், சவரனுக்கு ரூ.1600 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,16,800க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் வெள்ளி விலையும் ரூ.10 அதிகரித்து ஒரு கிராம் ரூ.260க்கும், ஒரு கிலோ ரூ.2,60,000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P