அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 73.02% இடங்கள் நிரம்பின
சென்னை, 20 ஆகஸ்ட் (ஹி.ச.) தமிழ்நாட்டில் உள்ள 181 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இளநிலைப் படிப்புகளுக்கான மொத்த இடங்களில் இதுவரை 73.02 சதவீத இடங்கள் நிரம்பியுள்ளதாக கல்லூரிக் கல்வி இயக்கக அ
Students


சென்னை, 20 ஆகஸ்ட் (ஹி.ச.)

தமிழ்நாட்டில் உள்ள 181 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இளநிலைப் படிப்புகளுக்கான மொத்த இடங்களில் இதுவரை 73.02 சதவீத இடங்கள் நிரம்பியுள்ளதாக கல்லூரிக் கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மொத்தம் 1,28,667 இளநிலைப் படிப்பு இடங்கள் உள்ளன. இதில் இதுவரை 94,743 இடங்கள் நிரம்பியுள்ளன. இவர்களில் 39,768 மாணவர்கள், 54,948 மாணவிகள் மற்றும் 27 மூன்றாம் பாலினத்தினர் இடம்பெற்றுள்ளனர்.

இதேபோல், முதுநிலைப் படிப்புகளில் மொத்தம் 24,470 இடங்கள் உள்ள நிலையில், இதுவரை 10,355 பேர் சேர்ந்துள்ளனர். இதன் மூலம் முதுநிலைப் படிப்புகளில் 42.32 சதவீத இடங்கள் நிரம்பியுள்ளன.

முதுநிலைப் படிப்புகளில் 2,901 ஆண்கள், 7,442 பெண்கள் மற்றும் 12 மூன்றாம் பாலினத்தினர் சேர்ந்துள்ளதாக கல்லூரிக் கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Hindusthan Samachar / P YUVARAJ