மாமல்லபுரத்தில் இன்று சுற்றுலா வாகனங்களுக்கு தடை
சென்னை, 20 ஆகஸ்ட் (ஹி.ச.) மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று மாமல்லபுரத்தில் உள்ள பல்லவர் கால புராதனச் சின்னங்களை பார்வையிட உள்ளதை முன்னிட்டு, மாமல்லபுரத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சென்னை வருகை தந்துள்ள அமித்ஷா, மாமல்
Mamalla


சென்னை, 20 ஆகஸ்ட் (ஹி.ச.)

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று மாமல்லபுரத்தில் உள்ள பல்லவர் கால புராதனச் சின்னங்களை பார்வையிட உள்ளதை முன்னிட்டு, மாமல்லபுரத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

சென்னை வருகை தந்துள்ள அமித்ஷா, மாமல்லபுரம் சென்று அங்குள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க புராதனச் சின்னங்களை பார்வையிட உள்ளார்.

இதையொட்டி, அவரது பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு மாமல்லபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதன்படி, இன்று காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை மாமல்லபுரத்திற்குள் வெளியூர்களில் இருந்து வரும் வாகனங்கள் மற்றும் சுற்றுலா வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் மாமல்லபுரம் செல்லும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், முக்கிய சாலைகள் மற்றும் புராதனச் சின்னங்கள் அமைந்துள்ள பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சரின் வருகை நிறைவடைந்த பின்னர், மாமல்லபுரத்தில் வாகனப் போக்குவரத்துக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / P YUVARAJ