ஒண்டிவீரன் நினைவு நாளில் முதல்வர் ஜோசப் விஜய் புகழஞ்சலி
தமிழ்நாடு, 20 ஆகஸ்ட் (ஹி.ச.) ஆங்கிலேயரின் அடக்குமுறைக்கு அஞ்சாமல், சுதந்திரக் கனலை ஏற்றிய விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் அவர்களின் நினைவு நாளையொட்டி, முதலமைச்சர் ஜோசப் விஜய் அவரை நினைவுகூர்ந்து புகழஞ்சலி செலுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெள
முதலமைச்சர்


தமிழ்நாடு, 20 ஆகஸ்ட் (ஹி.ச.)

ஆங்கிலேயரின் அடக்குமுறைக்கு அஞ்சாமல், சுதந்திரக் கனலை ஏற்றிய விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் அவர்களின் நினைவு நாளையொட்டி, முதலமைச்சர் ஜோசப் விஜய் அவரை நினைவுகூர்ந்து புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

மாவீரன் பூலித்தேவனின் படைத்தளபதியாக விளங்கிய ஒண்டிவீரன், நெற்கட்டான்செவல் போர்க்களத்தில் ஆங்கிலேயப் படைகளை எதிர்த்து நின்று நிலைகுலையச் செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.

தனது ஒரு கரத்தை இழந்தபோதிலும் பல போர்களில் பங்கேற்று, தாய்நாட்டின் விடுதலைக்காக தனது இன்னுயிரைத் தியாகம் செய்த ஒண்டிவீரனின் வீரத்தையும் தேசப்பற்றையும் நெஞ்சாரப் போற்றுவோம் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், வீரமும் தியாகமும் நிறைந்த தமிழர் வரலாற்றில் ஒண்டிவீரனின் புகழ் என்றும் நிலைத்தோங்கட்டும் என்றும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P