ஒண்டிவீரன் 255-வது நினைவு நாள் - முளைப்பாரி, பால்குடம் எடுத்து வம்சாவளியினர் மரியாதை
தென்காசி, 20 ஆகஸ்ட் (ஹி.ச) தென்காசி மாவட்டம் பச்சேரி கிராமத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரனின் 255-வது நினைவு வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, ஒண்டிவீரனின் வம்சாவளியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் முளைப்பாரி, பால்க
Omd


தென்காசி, 20 ஆகஸ்ட் (ஹி.ச)

தென்காசி மாவட்டம் பச்சேரி கிராமத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரனின் 255-வது நினைவு வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இதையொட்டி, ஒண்டிவீரனின் வம்சாவளியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் முளைப்பாரி, பால்குடம் எடுத்து முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து, ஒண்டிவீரனின் நினைவுச்சின்னத்தில் பாலாபிஷேகம் செய்து வீரவணக்கம் செலுத்தினர்.

ஒண்டிவீரனின் நினைவு நாளையொட்டி தமிழக வெற்றிக் கழகம், திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் நினைவுச்சின்னத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர்.

நிகழ்வையொட்டி பச்சேரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சுமார் 1,200 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Hindusthan Samachar / P YUVARAJ