Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 20 ஆகஸ்ட் (ஹி.ச.)
மதுரை மாவட்டம் அருகே உள்ள தனியார் பள்ளியில் பயிலும் பிளஸ் 2 மாணவிகள் சிலர், தங்களுக்கு இயற்பியல் பாடம் நடத்தும் ஆசிரியர் ராஜ்குமார் என்பவர் நேரடியாகவும், தொலைபேசி மூலமாகவும் பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்து வந்ததாக புகார் தெரிவித்துள்ளனர்.
மாணவிகளின் இந்த புகாரை அடுத்து பெற்றோர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை நடைபெற்றது. அதன் பின்னர் காவல்துறையில் முறையான புகார் அளிக்கப்பட்டது.
புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், இயற்பியல் ஆசிரியர் ராஜ்குமாரை கைது செய்தனர். மேலும் இந்த விவகாரத்தில் ஹாஸ்டல் வார்டன் உட்பட 4 பேர் மீது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த இயற்பியல் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b