Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 20 ஆகஸ்ட் (ஹி.ச.)
முன்னாள் பிரதமர் பாரத ரத்னா ராஜீவ் காந்தியின் 82-வது பிறந்தநாளையொட்டி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் எக்ஸ் தளத்தில் அவருக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
21-ஆம் நூற்றாண்டு நவீன இந்தியாவின் சிற்பியும், தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவருமான ராஜீவ் காந்தியின் தேசப் பணிகளைப் போற்றுவதாக தெரிவித்துள்ளார்.
தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்பு புரட்சிக்கு வித்திட்டு, இன்றைய டிஜிட்டல் இந்தியாவின் அடித்தளத்தை அமைத்தவர் ராஜீவ் காந்தி என குறிப்பிட்டுள்ள மாணிக்கம் தாகூர், பஞ்சாயத்து ராஜ் சட்டம், 18 வயதில் வாக்குரிமை, கிராமப்புற மாணவர்களுக்கான நவோதயா பள்ளிகள் உள்ளிட்ட அவரது தொலைநோக்குத் திட்டங்கள் இன்றும் இந்தியாவின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றி வருவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், அமைதி மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக உலக அரங்கில் உறுதியாக குரல் கொடுத்த உன்னத தலைவர் ராஜீவ் காந்தி என்றும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.
தேசத்தின் ஒற்றுமை, பன்முகத்தன்மை மற்றும் நவீன வளர்ச்சிக்காக தனது இன்னுயிரையே தியாகம் செய்த ராஜீவ் காந்தியின் தியாகமும் சிந்தனைகளும் என்றும் வழிகாட்டும் என மாணிக்கம் தாகூர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P