சிதம்பரத்தில் தனியார் மருத்துவமனையை கண்டித்து உறவினர்கள் சாலை மறியல்
சிதம்பரம், 20 ஆகஸ்ட் (ஹி.ச.) மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள அளக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் குணசேகர் மகன் கோபி (48). விவசாயக் கூலி தொழில் செய்து வரும் இவருக்கு முதுகுத் தண்டுவடத்தில் வலி பிரச்சனை இருந்ததால், சிதம்பரம் நடராஜர் கோவில் கிழ
சாலை மறியல்


சிதம்பரம், 20 ஆகஸ்ட் (ஹி.ச.)

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள அளக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் குணசேகர் மகன் கோபி (48). விவசாயக் கூலி தொழில் செய்து வரும் இவருக்கு முதுகுத் தண்டுவடத்தில் வலி பிரச்சனை இருந்ததால், சிதம்பரம் நடராஜர் கோவில் கிழக்கு கோபுர வாயில் பகுதியில் உள்ள கண்ணன் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்துள்ளார்.

அறுவை சிகிச்சை செய்த சில மணி நேரத்தில் கோபிக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக உறவினர்களுக்கு யாருக்கும் தகவல் தெரிவிக்காமல், அவரை கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனை நிர்வாகம் அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், கோபியை ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்த மருத்துவமனை நிர்வாகம், உடனடியாக மருத்துவமனையை மூடிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தவறான சிகிச்சை அளித்ததால் கோபி உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், நீதி கேட்டு உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர். பின்னர் கீழ ரத வீதியில் சாலை மறியலில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இறந்து போன கோபியின் மனைவி, பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் கதறி அழும் காட்சி காண்போரை கண் கலங்க வைத்துள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam