பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி
சென்னை, 20 ஆகஸ்ட் (ஹி.ச.) பழம்பெரும் நடிகையும், தமிழ் திரையுலகின் மூத்த கலைஞருமான சௌகார் ஜானகி உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 94 வயதான ச
Sowcar


சென்னை, 20 ஆகஸ்ட் (ஹி.ச.)

பழம்பெரும் நடிகையும், தமிழ் திரையுலகின் மூத்த கலைஞருமான சௌகார் ஜானகி உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

94 வயதான சௌகார் ஜானகி, தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். பல தலைமுறை ரசிகர்களால் அறியப்படும் அவர், வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த ஒரு வாரமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவருக்கு செயற்கை சுவாச உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், நடிகை சௌகார் ஜானகியின் தற்போதைய உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் சார்பில் நாளை அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவரது உடல்நிலை குறித்த தகவல் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ