சென்னையில் இன்று தமிழக காங்கிரஸ் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம்
சென்னை, 20 ஆகஸ்ட் (ஹி.ச) முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 82-வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று சென்னையில் நடைபெறுகிறது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் இன்று கால
Special General Council meeting of the Tamil Nadu Congress in Chennai today.


சென்னை, 20 ஆகஸ்ட் (ஹி.ச)

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 82-வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று சென்னையில் நடைபெறுகிறது.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் இன்று காலை 10 மணிக்கு இந்தக் கூட்டம் தொடங்குகிறது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் தலைமையில் நடைபெறும் இந்த சிறப்பு பொதுக்குழுவில் காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் தலைவர்கள், மாவட்ட தலைவர்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் பெருந்திரளாக பங்கேற்க உள்ளனர்.

இந்தக் கூட்டத்தில் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பங்களிப்புகளை நினைவுகூர்ந்து சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. மேலும் தமிழகத்தில் கட்சியை வலுப்படுத்துவது, வரவிருக்கும் தேர்தல் பணிகள் மற்றும் அமைப்பு ரீதியான மாற்றங்கள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்படும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் பூத் கமிட்டிகளை (வாக்குச்சாவடி முகவர் குழுக்கள்) பலப்படுத்துவது மற்றும் கட்சியின் அடுத்தகட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்து விவாதிப்பதே இக்கூட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

இதற்காக கட்சியின் அதிகாரப்பூர்வ X தளம் மற்றும் பேஸ்புக் பக்கம் வாயிலாக பல்வேறு முன்னேற்பாட்டுக் குழுக்கள் அமைக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளன.

Hindusthan Samachar / vidya.b