Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 20 ஆகஸ்ட் (ஹி.ச.)
கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் வட்டாட்சியர் பயிற்சி அதிகாரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதும், தனக்குக் கீழ் பணியாற்றும் ஊழியர்களை அப்பணிக்குப் பயன்படுத்துமாறு ஆணையிடுவதும் குற்றச்செயல் எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இடமாற்றம் செய்வதன் மூலம் சம்பந்தப்பட்டவர் தப்பித்துக் கொள்ள அரசு அனுமதிக்கக் கூடாது என்றும் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
வட்டாட்சியராகப் பயிற்சி பெறும் காலத்திலேயே இவ்வளவு அதிகாரத் திமிருடன் நடந்து கொள்ளும் ஒருவர், தனது பணிக்காலம் முழுவதும் மக்கள் விரோதியாகவே செயல்படுவார் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரி மீது தமிழக அரசு உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்ய வேண்டும் என மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ