கும்மிடிப்பூண்டி - கூடூர் 3, 4-வது இரயில் பாதை திட்டத்திற்கு ஒப்புதல்- மத்திய அரசுக்கு நயினார் நாகேந்திரன் நன்றி
தமிழ்நாடு, 20 ஆகஸ்ட் (ஹி.ச.) கும்மிடிப்பூண்டி - கூடூர் இடையே 3-வது மற்றும் 4-வது இரயில் பாதைகள் அமைக்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதற்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நன்றி தெரிவித்துள்ளார். சுமார் ரூ.2,229 கோடி
நயினார்


தமிழ்நாடு, 20 ஆகஸ்ட் (ஹி.ச.)

கும்மிடிப்பூண்டி - கூடூர் இடையே 3-வது மற்றும் 4-வது இரயில் பாதைகள் அமைக்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதற்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நன்றி தெரிவித்துள்ளார்.

சுமார் ரூ.2,229 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ள இந்தத் திட்டம், இரயில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதுடன், சரக்குப் போக்குவரத்தை விரைவுபடுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் இரயில்வே மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், பொதுமக்களின் பயணத்தை எளிதாக்கவும் தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து வரும் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய இரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோருக்கு தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P