சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்கள் பேட்டரி வாகனமாக இருப்பதே நல்லது - எஸ்.எஸ்.பாலாஜி
சென்னை, 20 ஆகஸ்ட் (ஹி.ச.) சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் என்பது வசதி அல்ல, அதில் அவர்கள் பயணிக்கும் போது அவர்களை அரசின் அங்கமாக அதிகாரப்பூர்வமாக வெளிப்படுத்திடும் என்பதே என்று விசிக பொருளாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான எஸ்.எஸ்.பாலாஜி தெரிவித்துள
SS Balaji


சென்னை, 20 ஆகஸ்ட் (ஹி.ச.)

சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் என்பது வசதி அல்ல, அதில் அவர்கள் பயணிக்கும் போது அவர்களை அரசின் அங்கமாக அதிகாரப்பூர்வமாக வெளிப்படுத்திடும் என்பதே என்று விசிக பொருளாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான எஸ்.எஸ்.பாலாஜி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில்,

நகராட்சி தலைவர்கள், ஒன்றிய குழு தலைவர்கள், மேயர், துணை மேயர், மாநகராட்சி எதிர்கட்சி தலைவர், நிலைக்குழு தலைவர்கள், மண்டல தலைவர்கள் இவர்கள் அரசு வாகனத்தில் பயணிக்கும் போது அரசமைப்பு சட்ட படிநிலையில் இவர்களுக்கு மேல் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அரசு வாகனம் என்பது தேவை என்பதை விட உரிமையாகும்.

இந்த அடிப்படையில் கடந்த சட்டமன்றத்திலேயே நானும் நன்பர் சேலம் அருள் அண்ணன் பூமிநாதன் இதற்கு அணைத்து சட்டமன்ற உறுப்பினர்களிடம் கையொப்பம் பெற்று அன்றைய முதலமைச்சர் அண்ணன் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் வழங்கினோம்.

கார் வசதி இல்லாமலா அரசு செயலாளர்கள் தொடங்கி பல துறை அலுவலர்களுக்கு அரசு வாகனம் வழங்கப்படுகிறது?

அதெல்லாம் செலவினம் ஆகாதா?

இந்த வாகனங்கள் பேட்டரி வாகனமாக (eV) இருப்பதே நல்லது என்று பதிவிட்டுள்ளார்.

Hindusthan Samachar / ANANDHAN