தமிழ்நாடு 108 அவசரகால ஊர்தி தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பாக அவசர ஆலோசனை
மதுரை, 21 ஆகஸ்ட் (ஹி.ச.) மதுரை ரயில் நிலைய மேற்கு நுழைவாயில் தமிழ்நாடு 108 அவசர ஊர்தி தொழிலாளர் முன்னேற்ற சங்கம் கண்டன கூட்டம் மற்றும் அக்டோபர் மாத வேலை நிறுத்த ஆயத்த கூட்டம் நடைபெற்றது. இதில்,சட்டபேரவை கூட்ட தொடரில் மாண்புமிகு மருத்துவம் மற்று
க


மதுரை, 21 ஆகஸ்ட் (ஹி.ச.)

மதுரை ரயில் நிலைய மேற்கு நுழைவாயில் தமிழ்நாடு 108 அவசர ஊர்தி தொழிலாளர் முன்னேற்ற சங்கம் கண்டன கூட்டம் மற்றும் அக்டோபர் மாத வேலை நிறுத்த ஆயத்த கூட்டம் நடைபெற்றது.

இதில்,சட்டபேரவை கூட்ட தொடரில் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் அவர்கள் 108 ஊழியர்களின் ஊதியம் 55000 என பேசிய பேச்சை தமிழ்நாடு 108 அவசர ஊர்தி தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.

இக் கூட்டத்தில் அக்டோபர் மாத வேலை நிறுத்தத்திற்கான ஆலோசனை கூட்டம் மற்றும் தொழிலாளர் தீர்ப்பாயத்தின் 8 மணி நேர பணி உத்தரவு மற்றும் 2023 மற்றும் 2024 ஆண்டிற்கான 25% ஊதிய உயர்வு 8.33 % தீபாவளி போனஸ் உடனே அமுல்படுத்த வேண்டும் ஆகியவை உட்பட 9 அம்ச கோரிக்கைகள் தீர்மானமாக நிறைவேற்றபட்டது.

Hindusthan Samachar / Durai.J