Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 21 ஆகஸ்ட் (ஹி.ச.)
கோவை பேரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தீத்திபாளையம் பாலாஜி நகரில் வீட்டின் முதல் மாடியில் குட்கா பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்ததாக இருவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தீத்திபாளையம் பாலாஜி நகரில் உள்ள ஒரு வீட்டில் குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக பேரூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பேரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நசீர் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட வீட்டில் சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1.10 டன் கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். குட்கா பொருட்களை ஓசூர் அருகே இருந்து வாங்கி வந்து, பேரூர் சுற்றுவட்டார பகுதிகளில் விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக இமானுவேல் (40) மற்றும் சாரங்கபாண்டி (52) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் சாரங்கபாண்டி கைது செய்யப்பட்டார்.
இமானுவேல் தலைமறைவாக உள்ளதால் அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
இதுகுறித்து பேரூர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / Durai.J