வரலட்சுமி விரதம் - ஆந்திர மக்களுக்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு வாழ்த்து
அமராவதி , 21 ஆகஸ்ட் (ஹி.ச.) வரலட்சுமி விரதத்தையொட்டி ஆந்திரப் பிரதேச மக்களுக்கு அந்த மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு உங்களுக
A


அமராவதி , 21 ஆகஸ்ட் (ஹி.ச.)

வரலட்சுமி விரதத்தையொட்டி ஆந்திரப் பிரதேச மக்களுக்கு அந்த மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

செல்வம் மற்றும் சவுபாக்கியத்தின் தெய்வமாக போற்றப்படும் வரலட்சுமி தேவியின் அருள் மாநில மக்கள் அனைவருக்கும் எப்போதும் கிடைக்க வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.

மேலும், ஆந்திரப் பிரதேசம் பால் வளம் மற்றும் விவசாய வளத்துடன் செழித்து, மக்கள் அனைவரும் சுக, சந்தோஷத்துடன் வாழ வேண்டும் என்றும் சந்திரபாபு நாயுடு வாழ்த்தியுள்ளார்.

குடும்பத்தின் சவுபாக்கியத்துக்காக அயராது உழைக்கும் பெண்கள் அனைவருக்கும் இந்த புனிதமான வரலட்சுமி விரதம் சிறப்பான நன்மைகளையும், மன அமைதியையும் வழங்க வேண்டும் என்றும் அவர் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA