தனியார் பொறியியல் கல்லூரிகளில் முறைகேடுகளைத் தடுப்பதற்காக உருவாக்கப்பட்ட கண்காணிப்பு அமைப்பு எங்கே? -அறப்போர் இயக்கம் கேள்வி
சென்னை, 21 ஆகஸ்ட் (ஹி.ச.) அமைச்சர் விஸ்வநாதன், பதிவாளர் குமரேசன் ஆகியோருக்கு அறப்போர் இயக்கம் தனது எக்ஸ் தளத்தில் பல்வேறு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி இருக்கிறது. அதில் அண்ணா பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்ற தனியார் பொறியியல் கல்லூரிகளில் ப
Arappor


சென்னை, 21 ஆகஸ்ட் (ஹி.ச.)

அமைச்சர் விஸ்வநாதன், பதிவாளர் குமரேசன் ஆகியோருக்கு அறப்போர் இயக்கம் தனது எக்ஸ் தளத்தில் பல்வேறு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி இருக்கிறது.

அதில்

அண்ணா பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்ற தனியார் பொறியியல் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் உண்மையில் அந்தந்த கல்லூரிகளில் தொடர்ந்து பணியாற்றுகிறார்களா என்பதை உறுதி செய்யும் நோக்கில், மாதந்தோறும் Online Biometric Verification கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது.

குறிப்பாக, கல்லூரிகளில் “Ghost Faculty மற்றும் Paper Faculty” போன்ற முறைகேடுகளைத் தடுக்க இந்த கண்காணிப்பு முறை மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

ஆனால், கடந்த சில மாதங்களாக Aadhar Based Biometric Authentication - Online நடைபெறவில்லை. இந்த மாதத்திற்கும் இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

இதுகுறித்து உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன், அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் குமரேசன் அவர்களுக்கும் சில நேரடியான கேள்விகள்:

கடந்த சில மாதங்களாக மாதாந்திர Aadhar Based Biometric Authentication - Online ஏன் நடத்தப்படவில்லை?

இந்த மாதத்திற்கான Biometric Verification அறிவிப்பு இதுவரை ஏன் வெளியிடப்படவில்லை?

இந்த தாமதத்திற்கான காரணம் என்ன? இதற்கு யார் பொறுப்பு?

Biometric Verification நடைபெறாத இந்த காலகட்டத்தில், இணைப்பு கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் உண்மையான பணிநிலையை அண்ணா பல்கலைக்கழகம் எந்த முறையில் கண்காணித்தது?

Aadhar Based Biometric Authentication - Online பற்றிய தகவல்கள் RTI இல் கேட்கப்பட்டதற்கு, அவை மறைக்கப்படவேண்டிய அவசியம் என்ன?

பெரும்பாலான கல்லூரிகள் திமுக, அதிமுக போன்ற கட்சி சார்ந்தோர் நேரடியாகவோ, மறைமுகமாகவோ நிர்வகிக்கின்றனர். எனவே அவர்கள் கொடுத்த அழுத்தத்திற்கு பயந்துவிட்டீர்களா ?

அமைச்சர் விஸ்வநாதன் அவர்களும், பதிவாளர் குமரேசன் அவர்களும் இதற்கு தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும். Ghost Faculty மற்றும் Paper Faculty போன்ற முறைகேடுகளைத் தடுப்பதற்காக உருவாக்கப்பட்ட கண்காணிப்பு அமைப்பு, இடைவெளியின்றி தொடர்ந்து செயல்பட வேண்டும் என்று பதிவிட்டுள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN