சாக்கடையிடம் சந்தனம் எதிர்ப்பார்ப்பது முட்டாள்தனம் - நாஞ்சில் சம்பத்தை விமர்சித்த நாராயணன் திருப்பதி
சென்னை, 21 ஆகஸ்ட் (ஹி.ச.) சாக்கடையிடம் சந்தனம் எதிர்ப்பார்ப்பது முட்டாள்தனம் என நாஞ்சில் சம்பத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்பாஜக மாநில செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி. அவர் தனது எக்ஸ் தளத்தில், நேற்று சென்னையில் நடைபெற்ற ஒரு விவாத நிகழ்ச்சி
Narayanan Thirupathi


சென்னை, 21 ஆகஸ்ட் (ஹி.ச.)

சாக்கடையிடம் சந்தனம் எதிர்ப்பார்ப்பது முட்டாள்தனம் என நாஞ்சில் சம்பத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்பாஜக மாநில செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி.

அவர் தனது எக்ஸ் தளத்தில்,

நேற்று சென்னையில் நடைபெற்ற ஒரு விவாத நிகழ்ச்சியில் த வெ க வின் நாஞ்சில் சம்பத் தரக்குறைவாக பேசியதற்கு பல்வேறு தரப்பினரும் தங்களின் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

உண்மையில் கண்டிக்கப்பட வேண்டியது ஊடகங்களும், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் இடையீட்டாளர்களும் தான்.

விவாத நிகழ்ச்சிகளில் தரக்குறைவாக பேசுபவர்களை தொடர்ந்து அழைப்பதே தவறு.

சாக்கடையிடம் சந்தனம் எதிர்ப்பார்ப்பது முட்டாள்தனம். நாஞ்சில் சம்பத்திடம் ஒழுக்கத்தை எதிர்பார்ப்பது அதை விட முட்டாள்தனம்.

தங்களின் T R P ரேட்டிங்கிற்காக பொது வெளியில் தரம் தாழ்ந்து, ஒருமையில், மரியாதை இல்லாமல், அநாகரீகமாக பேசுபவர்களை தொடர்ந்து அழைத்து ஊக்கப்படுத்தி வருகிறது ஊடகங்கள்.

நான் பலமுறை இதுகுறித்து பல்வேறு ஊடக நிர்வாகத்தினரிடம் தெரிவித்தும் எந்த பயனும் இல்லை. அவர்களுக்கு இது ஒரு வியாபாரம், அவ்வளவே.

நேற்றைய விவாதத்தில் நாஞ்சில் சம்பத் மேலும் பேச்சை தொடர ரங்கராஜ் பாண்டே அவர்கள் அனுமதிக்கவில்லை என்பது ஆறுதல். ஆனால், நாஞ்சில் சம்பத்தை அழைத்ததே தவறு என்பது தும்பை விட்டு வாலை பிடித்த கதை தான்.

என்னை போன்று பல கட்சிகளை சேர்ந்தவர்கள் விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயங்குவதற்கு காரணமே நாஞ்சில் சம்பத் போன்ற பல தகுதியில்லாத நபர்களை அழைப்பதால் தான்.

ஆனால், ஊடகங்கள் தங்களை மாற்றிக்கொள்வார்கள் என்று நான் நம்பவில்லை. பரபரப்பு தான் அவைகளுக்கு மூலதனம் என்று பதிவிட்டுள்ளார்.

Hindusthan Samachar / ANANDHAN