Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 21 ஆகஸ்ட் (ஹி.ச.)
உயர்கல்வித் துறையின் சுற்றறிக்கை, அரசு நிர்வாகத்தை இடதுசாரி அமைப்புகளுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கைகளை நோக்கி நகர்த்தும் வெளிப்படையான முயற்சி என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
இடதுசாரி அமைப்புகளை குறிவைப்பதும், உரிமைப் போராட்டங்களை ஒடுக்குவதும் எதேச்சதிகார செயல்பாட்டின் வெளிப்பாடு என விமர்சித்துள்ளார்.
மேலும், உயர்கல்வித் துறையின் சுற்றறிக்கையின் பின்னணியில் தலைமைச் செயலாளர் இருப்பதாக குற்றம்சாட்டிய சு.வெங்கடேசன், அவர் அந்தப் பதவியில் தொடர்ந்து நீடிக்கத் தகுதியற்றவர் என்றும் தெரிவித்துள்ளார்.
எனவே, தமிழக அரசு இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு, தலைமைச் செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சு.வெங்கடேசன் தனது எக்ஸ் பதிவில் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P