ஜெய்ப்பூரில் கட்சி நிர்வாகி மீது தாக்குதல் – ஒருவர் காயம்
ஜெய்ப்பூர், 21 ஆகஸ்ட் (ஹி.ச.) ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே உள்ள ராம்புரா–கன்வார்புரா கிராமத்தில் அரசு தொடக்கப் பள்ளியை ஆய்வு செய்வதற்காக CJP நிர்வாகிகள் சென்றுள்ளனர். பள்ளியின் கட்டமைப்பு மற்றும் மாணவர்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்து ஆய
அசுதோஷ் ரங்கா


ஜெய்ப்பூர், 21 ஆகஸ்ட் (ஹி.ச.)

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே உள்ள ராம்புரா–கன்வார்புரா கிராமத்தில் அரசு தொடக்கப் பள்ளியை ஆய்வு செய்வதற்காக CJP நிர்வாகிகள் சென்றுள்ளனர்.

பள்ளியின் கட்டமைப்பு மற்றும் மாணவர்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்ய அவர்கள் திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது.

கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் ஆஷுதோஷ் ரங்காவும் அங்கு செல்ல இருந்தார்.

அப்போது, பள்ளிக்கு வந்த CJP நிர்வாகிகளுக்கு எதிராக அப்பகுதி மக்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், நிலைமை மோதலாக மாறியதாக கூறப்படுகிறது. CJP நிர்வாகிகள் அங்கிருந்து வெளியேறுமாறு வலியுறுத்தப்பட்டதுடன், அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், வாகனங்களின் கண்ணாடிகள் சேதப்படுத்தப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக CJP தரப்பில், பாஜகவுடன் தொடர்புடையவர்கள் தாக்குதலை நடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

ஆஷுதோஷ் ரங்கா, வெளியில் இருந்து சிலர் அழைத்து வரப்பட்டு வன்முறையை தூண்டியதாகவும், உள்ளூர் பாஜக நிர்வாகி ஒருவர் சிலருக்கு பணம் வழங்கியதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்படவில்லை.

மறுபுறம், கிராம மக்கள் CJP தரப்பின் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசு ஏற்கனவே பள்ளி கட்டிடத்தை சீரமைக்க நிதி ஒதுக்கியுள்ளதாகவும், உள்ளூர் முயற்சியிலேயே பள்ளியை சீரமைக்க முடியும் என்றும் சிலர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, அரசு பள்ளிகளின் மோசமான நிலை குறித்து CJP சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பிரசாரத்தின் ஒரு பகுதியாகவே இந்த ஆய்வு நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam