14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - கதகளி பயிற்சியாளர் மீது போக்சோ வழக்கு
பாலக்காடு , 21 ஆகஸ்ட் (ஹி.ச.) கேரள மாநிலம் பாலக்காடு கல்லேக்குளங்கரா பகுதியில் கதகளி பயிற்சி அளித்து வருபவர் வெங்கிட்டராமன் (56). இவரிடம் 14 வயது சிறுமி ஒருவர் கதகளி பயிற்சி பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கதகளி பயிற்சியின்போது சிறும
A


பாலக்காடு , 21 ஆகஸ்ட் (ஹி.ச.)

கேரள மாநிலம் பாலக்காடு கல்லேக்குளங்கரா பகுதியில் கதகளி பயிற்சி அளித்து வருபவர் வெங்கிட்டராமன் (56). இவரிடம் 14 வயது சிறுமி ஒருவர் கதகளி பயிற்சி பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், கதகளி பயிற்சியின்போது சிறுமிக்கு வெங்கிட்டராமன் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே, சிறுமியின் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது கதகளி பயிற்சியின்போது தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து சிறுமி, அங்கிருந்த ஆலோசகரிடம் தெரிவித்ததாக தெரிகிறது.

இதையடுத்து பள்ளி நிர்வாகத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக வெங்கிட்டராமன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து தலைமறைவாக உள்ள வெங்கிட்டராமனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA