Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 21 ஆகஸ்ட் (ஹி.ச.)
மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் மருத்துவர் ஷர்மேஷ் கான் மற்றும் கார்த்திக் கண்ணன் ஆகியோர் தாக்கல் செய்த பொதுநல மனு.
தமிழகத்தில் மருத்துவ
மனைகளில் இருந்து சேகரிக்கப்படும் மருத்துவ கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த தமிழக முழுவதும் 7 தனியார் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
மதுரை மாவட்டத்தில் மட்டும் தினமும் சுமார் 4.5 டன் மருத்துவக் கழிவுகள் மருத்து
வமனைகளில் இருந்து சேகரிக்கப்படுகிறது .
அவற்றை முறையாக சேகரித்து, பாதுகாப்பாக , அறிவியல் முறையில் பாதுகாப்பாக அகற்றுவதற்கான விதிகளை கடுமையாக அமல்படுத்த வேண்டும்.
மேலும், மதுரை மற்றும் சுற்று
வட்டாரப் பகுதிகளில் முறையாக அகற்றப்படாத மருத்துவக் கழிவுகள் திறந்தவெளி, காலி இடங்கள் மற்றும் வைகை ஆற்றங்கரை பகுதிகளில் சட்டவிரோதமாக கொட்டப்படுகிறது.
தென் மாவட்டங்களில், மருத்துவக் கழிவு
சேகரிப்பதற்கு நான்கு தனியார் நிறுவனங்களிடம் ஒப்பந்தம் விடப்பட்டிருந்தது. ஆனால், கடந்த பல மாதங்களாக அந்த நிறுவனம் முறையாக மருத்துவ கழிவுகளை சேகரிப்பது இல்லை.
இதனால், மனிதர்களுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயமும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கேள்விக்
குறியாகி உள்ளது.
எனவே, மதுரை மாவட்டங்களில் மருத்துவமனைகளில் இருந்து பெறப்படும் மருத்துவ கழிவுகளை அறிவியல் ரீதியாக பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்து
வதை உறுதி செய்ய உத்தரவிட கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் கார்த்திகேயன், சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர்
குரு பிரியா ஆஜராகி, மருத்துவ கழிவுகளை பெறுவதற்காக ஒப்பந்தப்பட்ட ஒப்பந்தம் பெறப்பட்ட நிறுவனம் செயல்
படுவதில்லாததால், மருத்துவக் கழிவுகள் பொது இடங்களில் கொட்டப்படுகிறது. குறிப்பாக,
மதுரையில் வைகை ஆற்று பகுதியில் கொட்டப்படும் அவலம் தொடர்கிறது.
எனவே, உடனடியாக பாதுகாப்பான முறையில் மருத்துவக் கழிவுகளை அப்புறப்படுத்த உத்தரவிட வேண்டும் என தெரிவிக்
கப்பட்டது.
இதனைத்
தொடர்ந்து, நீதிபதிகள்,
மனுதாரர் குறிப்பிடும் பிரச்சனை மிக தீவிரமான பிரச்சினையாகும்.
எனவே, இது சம்பந்தமாக தமிழ்நாடு அரசு சுகாதாரத்துறை செயலர் சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர், மதுரை மாவட்ட ஆட்சியர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்தி வைத்தனர்.
Hindusthan Samachar / Durai.J