தொகுதி மறுவரை விவகாரத்தில் விஜய் சொன்னதில் உங்களுக்கு என்ன பிரச்சனை? - தமிழிசை சௌந்தரராஜன்
மதுரை, 21 ஆகஸ்ட் (ஹி.ச.) மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தராஜன், வருகிற செப்டம்பர் 17ஆம் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அதற்கான பணிகள் முழுமையாக நடைபெறுவதாக தெரியவில்
Tamilisai


மதுரை, 21 ஆகஸ்ட் (ஹி.ச.)

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தராஜன்,

வருகிற செப்டம்பர் 17ஆம் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அதற்கான பணிகள் முழுமையாக நடைபெறுவதாக தெரியவில்லை.

கோவில் கும்பாபிஷேகத்திற்கான முன்னேற்பாடு பணிகளை துரிதமாக கவனமுடன் செய்ய வேண்டும்.

புதிதாக பொறுப்பேற்றுள்ள ஆட்சியாளர்கள், அமைச்சர்கள் இங்கே அமர்ந்து பணிகளை உற்று கவனிக்க வேண்டும்.

இதை எங்களை போன்ற ஆட்கள் சுட்டிக்காட்டினால் அதை திருத்திக் கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நாங்கள் உங்கள் தவறுகளை சுட்டிக்காட்டுவது பகையால் அல்ல, பக்தியால்தான்.

ஆன்மீக நகரமான மதுரையை தூய்மையான நகரமாக மாற்ற வேண்டும்.

மீனாட்சி அம்மன் அருளால் தான் நீங்கள் புதிதாக ஆட்சி அமைத்துள்ளீர்கள். எனவே கோவில் கும்பாபிஷேக பணியை கவனமுடன் சிறப்பாக மேற்கொள்ள வேண்டும்.

வைகை ஆற்றின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. வைகை ஆற்றை தூய்மைப்படுத்தும் முயற்சிகளை அரசு செய்ய வேண்டும்.

தொகுதி மறுவரை விவகாரத்தில் விஜய் பல்டி அடித்துவிட்டார் என விமர்சிக்கிறார்கள். சரியான விகிதாசாரம் பின்பற்றப்பட வேண்டும் என்று அவர் சொன்னதில் உங்களுக்கு என்ன பிரச்சனை?

தென்மாநில முதலமைச்சர் மாநாடு ஆரோக்கியமான ஒன்று. மத்திய அரசு தென்மாநிலங்களை பற்றி கவலையில்லை என்று சொல்வார்கள். ஆனால், அமித்ஷா தென்மாநிலங்கள் மீது கவனம் செலுத்துகிறார்.

கோதாவரி - காவிரி இணைப்பு விவகாரத்தில் மத்திய அரசு கவனம் செலுத்துகிறது. தொகுதி மறுவரையில் அரசியல் செய்யாதீர்கள்.

பெண்களுக்கான இட ஒதுக்கீடு மூலம் தான் அவர்களுடைய வாய்ப்பை உறுதி செய்ய முடியும். பெண்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்க வேண்டும் என்பதற்காகவாவது தொகுதி மறுவரையறை நிச்சயம் வேண்டும்.

தமிழர்களின் மாநில உரிமைகளை பாஜக ஒரு நாளும் விட்டு தராது. காவேரியும் வேண்டும், தொகுதி மறுவரையறையும் வேண்டும். பெண்களுக்கான இட ஒதுக்கீடு வேண்டும்.

தவெகவுடன் திமுக போல எதற்கெடுத்தாலும் சண்டை போட மாட்டோம். அவர்கள் எங்களை SOFT ஆ அணுகினால் நாங்களும் SOFT ஆ அணுகுவோம்.

தவெக எப்படி எங்களை அணுகுகிறார்களோ, அதுபோல தான் நாங்கள் அவர்களை

கையாள்வோம் என்று பேசினார்.

Hindusthan Samachar / ANANDHAN