Enter your Email Address to subscribe to our newsletters

மகாராஷ்டிரா, 21 ஆகஸ்ட் (ஹி.ச.)
மகாராஷ்டிரா மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டத்தில், தவறான பாதையில் அதிவேகமாக வந்ததாக கூறப்படும் டொயோட்டா ஃபார்ச்சூனர் கார், இருசக்கர வாகனம் மீது நேருக்கு நேர் மோதியதில் இரண்டு சகோதரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சிக்கல்தானா எம்.ஐ.டி.சி. பகுதியில் உள்ள ஐ.டி. பூங்காவின் பின்புறம் புதன்கிழமை இரவு இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
போலீசாரின் முதற்கட்ட தகவலின்படி, ஃபார்ச்சூனர் கார் தவறான திசையில் வேகமாக வந்ததாக கூறப்படுகிறது. அப்போது எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது கார் பயங்கரமாக மோதியுள்ளது.
மோதலின் வேகம் அதிகமாக இருந்ததால், பைக்கில் பயணித்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தில் இருசக்கர வாகனம் முற்றிலும் உருக்குலைந்த நிலையில், ஃபார்ச்சூனர் காரும் பலத்த சேதமடைந்தது.
விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கார் ஓட்டுநர் தவறான பாதையில் வந்தாரா, விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P