மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் ஆவணி மூலத் திருவிழா!
மதுரை, 21 ஆகஸ்ட் (ஹி.ச.) மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் உள்ள குலசேகரன் கோட்டையில் அமைந்துள்ள அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் ஆவணி மூலத் திருவிழா கொடியேற்ற விழா நடைபெற்றது. கொடியேற்ற விழாவை முன்னிட்டு கோவிலில் சிறப்பு மகாயாகம் நட
க


மதுரை, 21 ஆகஸ்ட் (ஹி.ச.)

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் உள்ள குலசேகரன் கோட்டையில் அமைந்துள்ள அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் ஆவணி மூலத் திருவிழா கொடியேற்ற விழா நடைபெற்றது.

கொடியேற்ற விழாவை முன்னிட்டு கோவிலில் சிறப்பு மகாயாகம் நடைபெற்றது அதனை தொடர்ந்து அர்ச்சகர்கள் கொடிமரத்தில் கொடியேற்றினர் தொடர்ந்து பாலாபிஷேகம் மற்றும் சந்தனம் பன்னீர் உள்ளிட்டு அபிஷேகங்கள் நடைபெற்று தீபாராதனை காட்டப்பட்டது.

தொடர்ந்து கோவிலின் உள் பிரகாரத்தில் சாமியும் அம்பாளும் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர் விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான பட்டாபிஷேகம் வருகின்ற 22ஆம் தேதியும் பிட்டுக்கு மண் சுமந்த லீலை 24 ஆம் தேதியும் நடைபெற உள்ளது.

விழாவிற்கான ஏற்பாடுகளை திருப்பணி குழுவினர் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் ஸ்ரீ கோட்டையம்மன் அறக்கட்டளை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவில் குட்லாடம்பட்டி அண்ணாமலையார் மற்றும் குலசேகரன் கோட்டை குட்லாடம்பட்டி செமிணி பட்டி கச்சைகட்டி கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்

Hindusthan Samachar / Durai.J