பழனி, திருஆவினன்குடி மற்றும் மீனாட்சி அம்மன் கோயில் உண்டியல்களில் ரூ.3.98 கோடி காணிக்கை
திண்டுக்கல், 21 ஆகஸ்ட் (ஹி.ச.) திண்டுக்கல் மாவட்டம் பழனி அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக மலைக்கோயில், உபகோயில்கள் மற்றும் அடிவாரப் பகுதிகளில் நிரந்தர உண்டியல்கள் வ
Undiyal


திண்டுக்கல், 21 ஆகஸ்ட் (ஹி.ச.)

திண்டுக்கல் மாவட்டம் பழனி அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக மலைக்கோயில், உபகோயில்கள் மற்றும் அடிவாரப் பகுதிகளில் நிரந்தர உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன.

இந்த உண்டியல்கள் திருக்கோயில் இணை ஆணையர் முன்னிலையில் திறக்கப்பட்டு கார்த்திகை மண்டபத்தில் வைத்துப் பக்தர்கள், கல்லூரி மாணவிகள் மற்றும் கோயில் பணியாளர்களால் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.

பழனி மலைக்கோயில் உண்டியல்கள் மூலம் மட்டும் ரொக்கமாக ₹3,60,30,714 (ரூ.3 கோடியே 60 லட்சத்து 30 ஆயிரத்து 714) பெறப்பட்டது. மேலும், 635 கிராம் 650 மில்லிகிராம் தங்கமும், 9 கிலோ 155 கிராம் 800 மில்லிகிராம் வெள்ளியும், 918 வெளிநாட்டு கரன்சி நோட்டுகளும் காணிக்கையாகக் கிடைத்துள்ளன.

பழனி அடிவாரம் குழந்தை வேலாயுதசுவாமி திருக்கோயில் (திருஆவினன்குடி) உண்டியல்கள் மூலம் ₹37,66,801 ரொக்கப் பணமும், 24 கிராம் 320 மில்லிகிராம் தங்கமும், 478 கிராம் 300 மில்லிகிராம் வெள்ளியும் கிடைத்துள்ளது.

அதேபோல், மீனாட்சி அம்மன் கோயில் உண்டியல் மூலம் ₹29,715 ரொக்கப் பணம் காணிக்கையாக வசூலாகியுள்ளது.

இதன் மூலம் பழனி முருகன் கோயில் மற்றும் அதன் உபகோயில்கள் அனைத்திலும் சேர்த்து மொத்தமாக ₹3,98,27,230 (ரூ.3 கோடியே 98 லட்சத்து 27 ஆயிரத்து 230) ரொக்கப் பணமும், சுமார் 660 கிராம் தங்கமும், 9 கிலோ 634 கிராம் வெள்ளியும் காணிக்கையாகக் கிடைத்துள்ளதாகத் திருக்கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN