Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 21 ஆகஸ்ட் (ஹி.ச)
பயணிகளின் கூடுதல் கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில், தூத்துக்குடி – நரசாப்பூர் இடையே தேவைக்கேற்ப இயக்கப்படும் சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி, 06019 தூத்துக்குடி – நரசாப்பூர் விரைவு சிறப்பு ரயில் செப்டம்பர் 7, 14, 21 மற்றும் 28 ஆகிய திங்கட்கிழமைகளில் இரவு 11.30 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு, மூன்றாம் நாள் நள்ளிரவு 12.20 மணிக்கு நரசாப்பூரை சென்றடையும். இந்த ரயில் மொத்தம் 4 சேவைகள் இயக்கப்படும்.
மறுமார்க்கத்தில், 06020 நரசாப்பூர் – தூத்துக்குடி விரைவு சிறப்பு ரயில் செப்டம்பர் 9, 16, 23 மற்றும் 30 ஆகிய புதன்கிழமைகளில் அதிகாலை 4 மணிக்கு நரசாப்பூரில் இருந்து புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4.30 மணிக்கு தூத்துக்குடியை சென்றடையும். இந்த ரயிலும் 4 சேவைகள் இயக்கப்படும்.
இந்த சிறப்பு ரயில்கள் தூத்துக்குடி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூர், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூர் உள்ளிட்ட முக்கிய நிலையங்களில் நின்று செல்லும்.
சென்னை எழும்பூருக்கு அடுத்ததாக நெல்லூர், ஓங்கோல், சிராலா, பாபட்லா, தெனாலி, விஜயவாடா, குடிவாடா, கைகலூர், அகிவிடு, பீமவரம் உள்ளிட்ட நிலையங்களிலும் இந்த ரயில்கள் நின்று செல்லும்.
இந்த சிறப்பு ரயில்களில் ஒரு குளிர்சாதன இரு அடுக்கு பெட்டி, இரண்டு குளிர்சாதன மூன்று அடுக்கு பெட்டிகள், 8 படுக்கை வசதி கொண்ட பெட்டிகள், 4 பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளுடன் ஒரு இரண்டாம் வகுப்பு பெட்டி மற்றும் 2 சாமான்கள் மற்றும் பிரேக் வேன் பெட்டிகள் என மொத்தம் 18 பெட்டிகள் இடம்பெறும்.
இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு ஆகஸ்ட் 22-ஆம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ