Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 21 ஆகஸ்ட் (ஹி.ச.)
பழம்பெரும் நடிகையும், சமூக சேவகியுமான சவுகார் ஜானகியின் மறைவுக்கு, வீ தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பதிவில்,
சவுகார் ஜானகியின் மறைவுச் செய்தி மிகுந்த வருத்தமளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். தனது தனித்துவமான நடிப்பாலும், சிறந்த திரை ஆளுமையாலும் பல தலைமுறைகளின் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் என்றும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.
மேலும், சவுகார் ஜானகியின் மறைவு திரையுலகிற்கும், ரசிகர்களுக்கும் பேரிழப்பு என்றும், அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், திரையுலகினர் மற்றும் ரசிகர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அண்ணாமலை கூறியுள்ளார்.
இறுதியாக, சவுகார் ஜானகியின் ஆன்மா இறைவன் திருப்பாதங்களை அடைய வேண்டுகிறேன் என்றும், ஓம் சாந்தி என்றும் தனது பதிவில் அண்ணாமலை குறிப்பிட்டு
ள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P