Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 21 ஆகஸ்ட் (ஹி.ச.)
இந்தியத் திரையுலகின் பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி மறைவுக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக திரையுலகில் பயணித்த சௌகார் ஜானகி, கதாநாயகி, குணச்சித்திர நடிகை, தாய், பாட்டி என பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து பல தலைமுறை ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் என குறிப்பிட்டுள்ளார்.
‘புதிய பறவை’, ‘இரு கோடுகள்’, ‘எதிர்நீச்சல்’, ‘உயர்ந்த மனிதன்’, ‘கவியத்தலைவி’, ‘தில்லுமுல்லு’ உள்ளிட்ட திரைப்படங்களில் அவரது சிறப்பான நடிப்பு தமிழ் சினிமா வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும் என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
சௌகார் ஜானகியை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துள்ள அவர், அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்பதாகவும் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / GOKILA arumugam