மக்களைச் சந்திக்க எம்எல்ஏக்களுக்கு கார் தேவை - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
சென்னை, 21 ஆகஸ்ட் (ஹி.ச.) இன்றைய சட்டமன்ற கூட்டத் தொடரில் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வழங்குவது தொடர்பான விவாதத்தில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாகனம் (கார்) வழங்குவதாக அறிவ
Aadhav Arjuna


சென்னை, 21 ஆகஸ்ட் (ஹி.ச.)

இன்றைய சட்டமன்ற கூட்டத் தொடரில் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வழங்குவது தொடர்பான விவாதத்தில்,

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில்,

அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாகனம் (கார்) வழங்குவதாக அறிவித்திருக்கிறீர்கள். ஆனால் முதல்வர் ஏற்கெனவே தமிழக அரசு நிதி நெருக்கடியில் இருப்பதாகக் கூறி வருகிறார்.

அதனால் எங்கள் தலைவரின் அறிவுறுத்தலின் படி திமுகவைச் சேர்ந்த 59 சட்டமன்ற உறுப்பினர்களும் இந்த வாகனத்தை பெற வேண்டாம் என்று முடிவு எடுத்திருக்கிறோம்.

மேலும் அரசுக்கு ஏற்படுகின்ற தேவையற்ற செலவை குறைகின்ற நோக்கத்தில் வைத்துக்கொண்டு பொருளாதாரத்தில் நலிவடைந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமே கார் வழங்க வேண்டும் என்று பேசினார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா,

எங்கள் முதல்வரின் நோக்கம்... இந்த சட்டமன்றத்தில் ஏழ்மையாக இருக்கக்கூடிய சட்டமன்ற உறுப்பினர்களும் இருக்கிறார்கள்.

குறிப்பாக விசிக சட்டமன்ற உறுப்பினர் ஊரில் இருந்து வரும்போது பஸ்ஸில் தான் வருகிறார். அவர் கோரிக்கை வைத்தார்.

அதனால் அனைவருக்கும் சமமாக செயல்பட வேண்டும் என்று எங்கள் முதல்வர் அறிவித்தார். தவெகவில் இருக்கும் சில உறுப்பினர்களும் அந்த வாகனத்தை வாங்கப்போவதில்லை.

எங்கள் நிலைப்பாடும் அதுதான். எங்களிடம் 2, 3 கார் இருக்கிறது என்றால் நாங்களும் காரெல்லாம் கேட்கமாட்டோம். மன்னார்குடி எம்எல்ஏ சொன்னார் என்னிடம் 4 கார் இருக்கிறது.

ஆனால் முதல்வர் கொடுத்த அரசு காரில் சென்றால் மாரியாதையாக இருக்கும் என்றார். எதிர்கட்சி தலைவரிடம் 2,3 வீடுகள் இருக்கிறது. ஆனால் அவர் அரசு பங்காளவில் இருக்கிறார் அல்லவா?

அரசு பங்களாவில் வசிப்பதற்கானக் கடிதத்தை என்னிடம் தான் கொடுத்தார். மக்களைச் சந்திக்க எம்எல்ஏக்களுக்கு கார் தேவை என்று பேசினார்.

Hindusthan Samachar / ANANDHAN