Enter your Email Address to subscribe to our newsletters

ஐதராபாத் , 21 ஆகஸ்ட் (ஹி.ச.)
தெலங்கானா மாநில பொது சுகாதாரத்துறை முன்னாள் இயக்குனர் டாக்டர் கடலா ஸ்ரீனிவாச ராவ், ஜனசேனா கட்சியின் தெலங்கானா மாநில அதிகாரப்பூர்வ செய்தித்தொடர்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை கட்சி தலைமை வெளியிட்டுள்ளது.
தனக்கு இந்த முக்கிய பொறுப்பை வழங்கிய ஜனசேனா கட்சி தலைவரும், ஆந்திரபிரதேச துணை முதல்-மந்திரியுமான பவன் கல்யாணுக்கு டாக்டர் ஸ்ரீனிவாச ராவ் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
என் மீது நம்பிக்கை வைத்து இந்த பொறுப்பை வழங்கிய பவன் கல்யாணுக்கு நன்றி. இந்த பொறுப்பை மிகுந்த பணிவுடனும், முழு அர்ப்பணிப்புடனும் ஏற்றுக்கொள்கிறேன். ஜனசேனா கட்சியின் கொள்கைகள், நோக்கங்கள் மற்றும் மக்கள் பிரச்சினைகள் தொடர்பான கட்சியின் நிலைப்பாட்டை மக்களிடம் வலுவாக கொண்டு செல்ல தொடர்ந்து பாடுபடுவேன்.
மக்கள் சேவையே எனது முதன்மையான நோக்கம்.
தெலங்கானாவில் ஜனசேனா கட்சியை விரிவுபடுத்தவும், வலுப்படுத்தவும் தொடர்ந்து உழைப்பேன். களத்தில் உள்ள மக்களின் பிரச்சினைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்து, கட்சிக்கும் மக்களுக்கும் இடையே வலுவான பாலமாக செயல்படுவேன் என்றார்.
மேலும், தனது நியமனத்துக்கு ஒத்துழைப்பு வழங்கிய கட்சியின் பொதுச்செயலாளர் ராம் தல்லூரி, மூத்த தலைவர்கள் மற்றும் தனக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் ஜனசேனா தொண்டர்கள், மகளிர் அணியினர் மற்றும் கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் டாக்டர் ஸ்ரீனிவாச ராவ் நன்றி தெரிவித்தார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA