வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடாததை கண்டித்து விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்
திருச்சி, 21 ஆகஸ்ட் (ஹி.ச.) திருச்சி மாவட்டம் முசிறி வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக தொட்டியம் வட்ட காவிரி நீர் பாசன வாழை வெற்றிலை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பில் தொட்டியம் வடகரை வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடாததை கண்டித்து அவரும் தொடர் உண்ணா
க


திருச்சி, 21 ஆகஸ்ட் (ஹி.ச.)

திருச்சி மாவட்டம் முசிறி வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக தொட்டியம் வட்ட காவிரி நீர் பாசன வாழை வெற்றிலை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பில் தொட்டியம் வடகரை வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடாததை கண்டித்து அவரும் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொட்டியம் வடகரை வாய்க்காலில் தண்ணீர் திறந்து விட வேண்டும் தண்ணீர் திறக்காத காரணத்தால் சாகுபடி செய்யப்பட்டுள்ள வாழை மரங்களும் நடவு செய்துள்ள வாழைக்கன்றுகளும் கருகி வருவதாகவும், வாழை சாகுபடி நடவு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் விவசாயிகளுக்கு சுமார் பத்து கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி விவசாயிகள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு வடகரை வாய்க்காலில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் பேரணியாக

நடந்து வந்து வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளித்திருந்த நிலையில் வடகரை வாய்க்காலில் தண்ணீர்

திறக்கவில்லை .

இதையடுத்து சங்கத்தின் தலைவர்

மருத பிள்ளை தலைமையில்

விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

Hindusthan Samachar / Durai.J