போக்குவரத்துத் துறையை தனியாரிடம் ஒப்படைப்பதா? – த.வெ.க அரசுக்கு அப்பாவு கேள்வி
சென்னை, 21 ஆகஸ்ட் (ஹி.ச.) கல்வி, சுகாதாரம், குடிநீர் மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட மக்கள் நலத்துறைகள் தனியார்மயமாக்கப்படாது என தேர்தல் வாக்குறுதி அளித்துவிட்டு, தற்போது அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் ஓட்டுநர், நடத்துநர்களை தற்காலிகமாக நியமிக்கும
அப்பாவு


சென்னை, 21 ஆகஸ்ட் (ஹி.ச.)

கல்வி, சுகாதாரம், குடிநீர் மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட மக்கள் நலத்துறைகள் தனியார்மயமாக்கப்படாது என தேர்தல் வாக்குறுதி அளித்துவிட்டு, தற்போது அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் ஓட்டுநர், நடத்துநர்களை தற்காலிகமாக நியமிக்கும் உரிமையை உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு வழங்கியிருப்பது தமிழக மக்களுக்கு செய்யும் துரோகம் இல்லையா என தமிழக சட்டப்பேரவை முன்னாள் தலைவர் அப்பாவு கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவரது எக்ஸ் பதிவில் கூறியதாவது;

தவெக ஆட்சிக்கு வந்தால் கல்வி, சுகாதாரம், குடிநீர் மற்றும் போக்குவரத்து தனியார்மயமாக்க மாட்டோம் என்று தேர்தல் வாக்குறுதி அளித்த விஜய் சார், இன்று கல்வி,சுகாதாரம், குடிநீரை தொடர்ந்து போக்குவரத்து கழகத்திற்கும் ஓட்டுனர்-நடத்துனர் தற்காலிக நியமன உரிமையை உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த கம்பெனிக்கு கொடுத்தது தமிழக மக்களுக்கு செய்த துரோகமில்லையா CM சார் ?

மேலும் தேர்தல் வாக்குறுதியாக தவெக ஆட்சிக்கு வந்தால் அடுத்த நிமிடமே அனைத்து பேரூந்துகளிலும் அனைத்து மகளிரும் கட்டணமில்லாமல் பயணிக்கலாம் என்று ரீல்ஸ் விட்ட முதல்வரே ! தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக வரலாறு தெரியுமா CM sir ?

தமிழ்நாட்டில் தனியார் போக்குவரத்து பேருந்துகளை 1972 -ஆம் ஆண்டு அரசுடைமையாக்கி 1 - 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகள் கட்டணம் இல்லாமல் பயணிக்கலாம் என்றும், 1996-ல் முன்னாள் முதல்வர் முகஸ்டாலின் அவர்களின் சட்டமன்ற கோரிக்கையை ஏற்று 9 - 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளும் கட்டணமில்லாமல் பயணிக்கலாம் என்றும் ஆணையிட்டு இன்று வரை நம் மாணவச் செல்வங்களை பயன் பெற வைத்தவர் மறைந்த தலைவர் #கலைஞர் என்பது ஞாபகம் இருக்கிறதா CM sir ?

தொடர்ந்து 2021-ல் ஆட்சிக்கு வந்த திமுகழகம் முதல் நாள் முதல் கையெழுத்தாக அனைத்து மகளிரும் நகர பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணிக்கலாம் என்ற விடியல் #பயணத் திட்டத்தை அறிமுகம் செய்து, மாபெரும் சமூகப் புரட்சியை இந்தியாவில் முதன் முறையாக ஏற்படுத்தியவர் முன்னாள் முதல்வர் #முகஸ்டாலின் என்ற வரலாறு உங்களுக்கு தெரியுமா CM சார் ?

மண் குதிரையை நம்பி வாக்களித்து ஏமாந்து விட்டோமே என்று மக்கள் புலம்பும் சத்தம் உங்கள் காதில் ஒலிக்கவில்லையா? ஒன்றிய பாஜக அழுத்தத்தால் மின்துறையையும் கட்டணத்தை உயர்த்தி தனியாருக்கு (அதானி) தாரைவார்க்க துணிந்து விட்டீர்களே CM sir ?

இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / GOKILA arumugam